வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: 08/01/2009 - 09/01/2009

Monday, August 17, 2009

"அதிசய காலண்டர்""அதிசய காலண்டர்" ஆம் திபெத்தின் காலண்டரில் 13 என்ற தேதி இடம் பெற்றிருக்கவில்லை.

ஏனெனில் 13 என்ற எண் துரதிஷ்டம் தரும் என்று அந்நாட்டு மக்களால் நம்பப்பட்டு வருவதால், 11,12, க்கு பிறகு "14",14,15,16, என்றே அமைத்திருக்கிறார்கள்.

12 க்கு பின் 14 என்றும், 15 க்கு முன் வரும் 14 என்றும் எடுத்துக்கொள்கின்றனர்.


Friday, August 14, 2009

"அன்புள்ள என்னவளே!"


என் இதய துடிப்பின் ஓசையில்,
உன் பெயரை கேட்கிறேன்.

உன் பெயரை கேட்கும் போது,
ஸ்வரங்கள் கேட்டதாய் உணர்கிறேன்.

கண்கள் இரண்டால் கட்டி இழுக்கிறாய்,
என் இதய கப்பலை.

எனிதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும்,
உன்னை நினைத்தே துடிக்கிறது.

உன் வாசம் உள்ள வரை நானும்,
வாழ்வேன் தரணியிலே.

அழியில் நீர் ஆவியாகி வற்றலாம்,
ஆவியனேனெனினும் வற்றாதென் காதல்.

ஏழிசையை கேட்போர் இசைவர் அதன்பால்,
நானிசைந்தேன் உன் பெயரால்.

பாலையில் தாகமாய் தேடுவர் நீர் தென்படும்,
ஆனால் கானலாயன்றோ.

நானும் கண்டேன் உன்னை விழியுறங்கி,
திறந்தேன் கானலாய் மாயமானாய்.

மாயமானாகி சீதையை தூக்கி சென்றான்,
அன்று லங்கை வேந்தன்.

மானே உன்னை கண்களால் கைது,
செய்தேன் விழித்தேன் கனவிலே.

நீ கிடைக்க நான் முயன்றேன்,
நீயும் முயன்றாய் தோற்றது.

தோற்றது நம் முயற்சி மட்டுமே,
கண்ணே நம் காதல் இல்லை.

தீ விழி பார்வை பட்டு,
எரிந்ததோ நம் காதல்.

அக்கினி பிழம்பில் இட்டாலும் துடிக்கும்,
காதல் இதயம் அல்லவா.

இதயமே! இறந்தாலும் துடிப்பதை நிறுத்தாதே,
அவள் வாழ்ந்த கோவிலது.

அன்பே நீ விரும்பிய இதயம் இருக்கும்,
உனதறையில் என்றும் வசிப்பாய்.

உன்னைக் காட்டிய என் கண்களோடு,
எனக்கு பின்னும் துடிக்கும்..

mailto:kulandhaivels@gmail.com

Wednesday, August 12, 2009

அன்பு செல்வமே !

உன் அன்பே நான் சேமித்த செல்வம்,


உன் வாய் ஒரு சொல்...
ஒரு சொல் கடும் சொல் பிரசவித்தால்,
என் நெஞ்சம் புண்ணாகிப்போகும்,
என்றாலும் ,
அதை நீ எண்ணி வருந்தும் வேளையும்,
என் நெஞ்சம் ரணமாகும்,
நீ ஏதோ கோபத்தால் உணவெடுக்க மறுத்தாலும்,
வாடும் உன் அன்னையின் மனம்,
நான் வாழ்வதே உனக்காய்.....


ஆயினும்.............
நீ கோபிக்கும் அழகையும் நான் ரசிக்கிறேன்,
கோபம் மறந்து நீ...
அம்மா என்னை மன்னிச்சுக்கோ....
என கேட்கும் பொழுது....
என்னையும் அறியாமல்........
நான் மனதினுள் அழுதிடுவேன்....
உன் மனதை அறிவேன்..
உன் தேவையையும் அறிவேன்,
நீ கேட்கும் முன் அதை கொடுக்கவே,
நான் இருக்கிறேன் உனக்காய்...
எப்போதும் ....
கலங்காதே...
என் சுவாசமே நீ....................

Monday, August 10, 2009

"செல்லமே"
மல்லிகை,முல்லை,பன்னீர் புஷ்பம்,சிவந்த ரோஜா -

கோர்த்துக்கட்டிய பூச்சரம் போலே எல்லாரும் ஒண்ணு சேருங்க,

சேர்ந்து நாங்க சொல்லப்போற கதைய கேளுங்க..,


அரை வயிறு கஞ்சி குடித்து,
ஆத்து மேட்டில் ஆடு மேய்ச்சு,
சுள்ளிக்காட்டில் விறகு பொறுக்கி,
காலில் தைத்த முள்ளையும் கண்டுக்காம,
முல்லையுன்னை ஆளாக்க,
கஷ்டப்பட்டு பாடுபட்டங்க.
உன்னை படிக்க................
உன்னை படிக்க வைக்க கஷ்டப்பட்டாங்க.

ஆனா நீ அவங்க பேச்ச,
கேட்காம மதிக்காம நடப்பதேனோ,
இனியும் இம்மியும் மதிக்காமல் நடந்திடாதே,
விழியுனை காத்திடும் இமையான பெற்றோரை.
பத்து மாசம் சுமந்தாள் உன்னை,
சுமையை நினைத்தா கண்ணே!
இல்லை,சுகமாய் நினைத்தே.

உன் தேவையறிந்து கடும் மழை வெயில் பார்க்காம,
பனியும் பார்க்காம பணி செய்து,
பிணியிலும் உனைக்காத்தாள்.
அந்த காசிலே உனக்கு பால் பவுடரும்,
அணிய துணியும் எடுத்து வந்தார்கள்.

அவள் படும் துன்பத்தைப் பார்த்தாவது,
அவர்கள் சொல் கேளாயோ.

எத்துனையோ குழந்தை செல்வங்கள்,
தெய்வத்தின் குழந்தைகள் எனும் பேரில்,
ரோட்டோரம் ஆதரவின்றி திரிவோர் எத்தனை,
அக்காட்சி நம் கண்களை குளமாக்கும்.

நம்மால் உதவி செய்ய நெஞ்சம் முடியும்,
ஆனால் எத்துனை பேருக்கு,
அதற்காகவே உதவும் கரங்கள் தோன்றின,

ஆனால் .......

உனக்காகவே
உயிர் வாழும்,
உந்தையும் தாயும்,
மகிழும் படி அவர் சொல் கேளாய்!
என் செல்லமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!