வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: 06/01/2009 - 07/01/2009

Monday, June 29, 2009

நட்புக்கு சமர்ப்பணம்

என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த காதலை
சொல்ல துணிந்து சென்றேன்
அவளிடம்,

ஆனால்.,

முகத்தில் தயக்கம் மட்டுமே.
வார்த்தைகள் வராமல் தத்தளித்து நின்றேன் .

என்னை புரிந்து கொண்டு,
என் நிலை கண்டு கேட்டாள் என் தோழி,
ஒன்றுமில்லை என்று சொன்னேன் அவளிடம் ,

அவளோ.,

நிச்சயம் ஏதோ இருக்கிறது ஆனால் சொல்ல தயங்குகிறாய்,

ஏன் நான் உன் தோழி இல்லையா,
என்னிடம் சொல்ல கூடாதா என்றாள் .


ஆம் நீ என் தோழிதான் ,

ஆனால்,

உலுக்கினால் திடுக்கிட்டு விழித்தேன் ,

என்னவென்று கேட்டால்.,
முடியாமல் போகவே சமாளித்தேன் .

ஆம் அவளுக்கு தெரிய வேண்டாம் என் வேதனை
,
ஆனால் என்னை மீறி,
காதல் புத்தகத்தை படித்து விட்ட என் மனதை நொந்து கொண்டேன் ,


நான் எப்படி கூறுவேன் தோழி ,

நான் உன் தோழியை காதலிக்கிறேன் என்று.

அக்கணமே
நான் வெடித்து சிதறிடுவேன்,
உன் நட்பின் முன்னாள்.


காதலுக்கு முன், நட்பு வென்றது ..

Friday, June 26, 2009

தாய்மை


உயிருக்கு உரம் கொடுத்தாய்,Thursday, June 25, 2009

அவள் ஒரு தேவதை


பனியில் நனைந்திருந்த அவள் முகம்,

கார் மேகமாய் படர்ந்திருந்த அவள் கூந்தல்,

இமை கொட்டாமல் பார்க்க தூண்டும் அவள் கண்கள்,

பாதையில் கடக்கும் போதும் அவள் வாசம்,

பார்த்து பார்த்து ரசித்தேன் அவள் அழகை,
பாராமல் சுவாசித்தேன் அவள் மீது மோதிய காற்றை.
என்னை கடந்து போனாலும்...,
அவள் நினைவில், என் மனம் முழுக்க அவள்.,
பின் தினந்தோறும் காத்து கிடந்தேன்.,
அவள் வருகைக்காய்.

பார்த்தாலே பரவசம் அவள் சிரிப்பால்..


கரை தொடும் அலையாய் நான்.,

ஆதலினாலோ.,

அவளோடு சேர முடியாமல் அருகே வந்து போகிறேனோ...

கரை கடக்க ஓர் நாள்...

பொங்கினேன் சுனாமியாய்...

ஆனால் அவள் துயரம் காண....

சகியாமல் திரும்பி விட்டேன்.