வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: அவள் ஒரு தேவதை

Thursday, June 25, 2009

அவள் ஒரு தேவதை


பனியில் நனைந்திருந்த அவள் முகம்,

கார் மேகமாய் படர்ந்திருந்த அவள் கூந்தல்,

இமை கொட்டாமல் பார்க்க தூண்டும் அவள் கண்கள்,

பாதையில் கடக்கும் போதும் அவள் வாசம்,

பார்த்து பார்த்து ரசித்தேன் அவள் அழகை,
பாராமல் சுவாசித்தேன் அவள் மீது மோதிய காற்றை.
என்னை கடந்து போனாலும்...,
அவள் நினைவில், என் மனம் முழுக்க அவள்.,
பின் தினந்தோறும் காத்து கிடந்தேன்.,
அவள் வருகைக்காய்.

பார்த்தாலே பரவசம் அவள் சிரிப்பால்..


கரை தொடும் அலையாய் நான்.,

ஆதலினாலோ.,

அவளோடு சேர முடியாமல் அருகே வந்து போகிறேனோ...

கரை கடக்க ஓர் நாள்...

பொங்கினேன் சுனாமியாய்...

ஆனால் அவள் துயரம் காண....

சகியாமல் திரும்பி விட்டேன்.

2 comments:

Mani said...

நம்மில் நெறைய பேர் சுனாமி மாதிரி பொங்குவோம்... அப்படியே திரும்பியும் போயிடுவோம்...

தமிழ் காதலன் said...

mani sir,thanks for visit.