வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: என் இதயத்தின் யோசனை.

Sunday, August 29, 2010

என் இதயத்தின் யோசனை.உன்னை பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே..................


இந்த வரிகளின் வலியை
இன்று நான் உணர்ந்தேன்..

காதல் கூடமும் போர்க்களம் தானோ?

அதனால் தான் நீயும் என்னை
எதிரியாய் பர்க்கின்றாயோ?

பண்டைய காலம் போல் மாலையில்
தாக்குதலை நிறுத்தலாமே!

நட்பை பரிமாறலாமே!

உன் குரல் கேட்டால் மிதக்கும்
என் மனம் வானத்தில்.ஆனால் நீ யாரென்று கேட்டதும்,
நின்று விட்டது இதயம்.,

துடித்தபடி கேட்டதென் இதயம்,
அவளுக்கு நீ யாரென்று.

அவளுக்கு நீ யாரென்று,
புரிய வை.

புரிய வை,
உன் மனதை.

உனக்குள் இருக்கும் அவள்
மனதில் நீ புகுவாய்..

என்சொல்லி துடித்தது இதயம்.

சொல்ல முடியாமல்
தவிக்கின்றதென் மனம்.

எண்ணத்தின் ஓடத்தில்,

காதல் கோட்டையின்
சான்றிதழ் போல்............

எனக்கு.........?


ஒரு நம்பிக்கை..
யோகம் தானாய் வரும் என்று...


ஆனாலும் முயாலாமல்...
கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாமா..

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.kulandhaivels@gmail.com