வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: அனுபவம்

Saturday, September 22, 2012

அனுபவம்

கடந்த வாரம் எனது நண்பன் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு  இணையத்தளம் மூலம்  ரயில் பயணத்திற்கு  முன்பதிவு செய்திருந்தார்,.

பயனசீட்டையும் கையில் வைத்திருந்தார். ஆனால் அசல் அடையாளை அட்டையை அலுவலகத்திலேயே விட்டு வந்து விட்டார்.

தைரியமாக ரயிலில் ஏறி அமர்ந்தவர் சற்று நேரத்தில் உறங்க ஆரம்பித்து விட்டார். பயண சீட்டு பரிசோதகர் வந்தார் .. அடையாள அட்டை கேட்டார்.. பாவம் நம்மவர்..

பரிசோதகர் : அதிக பட்ச அபராத கட்டணம் செலுத்துங்கள் இல்லையேல் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி விடவேண்டுமென்று கூறிவிட்டு சென்று விட்டார்..


நம்மவர் தைரியமாக உறங்கிவிட்டிருக்க..
 மீண்டும் வந்தார் பரிசோதகர்.. நண்பர் இக்கட்டான சூழலில் விழிக்க.. வீசினார் வலையை .. சரி சரி !! என்னை கவனியுங்கள் நான் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறேனென்று எந்திரன் ஸ்டைலில் கண்ணால் ஜாடை காட்ட .. (ஒரு காந்தி நோட்டை வேறு வழியின்றி கொடுத்து தொடர்ந்து பயணித்தார்.

நண்பர்களே இது போன்ற சூழலை தவிர்க்க பயணத்தின் போது  தவறாமல் அசல் அடையாள அட்டையை பத்திரமாக எடுத்து செல்லுங்கள்.
உங்கள் தொலை பேசி மற்றும் அலைபேசி எண்களை அதனோடு குறித்து இணைத்து வையுங்கள். ஏனெனில், தவற விட்டாலும் ந(ம்)ல்லவர்கள் கையில் கிடைத்தால் அதை  உங்களிடம் ஒப்படைக்க அவர்களுக்கு எளிதாக இருக்கும்.

இல்லையேல் எடுத்தவர்கள் சிரமம் பாராமல் அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டால் உரியவர்களிடம் எளிதாக சேர்க்க முடியும்.
என்ன.. பைன் கட்டி தான் வாங்க வேண்டும். இது போல் சில முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நிறைய சூழல்களில் இக்கட்டை தவிர்க்க முடியும்.

என்ன நண்பர்களே!! முடியும் தானே.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

www.stgroup.co.in
kulandhaivels@gmail.com