வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: ஆஸ்கர் விருதுக்கு சாம் ஆண்டர்சன் தேர்வு. "விருதே விருது வாங்குகிறது"

Tuesday, July 14, 2009

ஆஸ்கர் விருதுக்கு சாம் ஆண்டர்சன் தேர்வு. "விருதே விருது வாங்குகிறது"


ஆஸ்கர் விருதுக்கு சாம் ஆண்டர்சன் தேர்வு. "விருதே விருது வாங்குகிறது " இது ஒரு "கற்பனை" டெலிபோன் உரையாடல் .

கமல் : ஹலோ கமல் ஹியர் ..

சாம் : ஹலோ கமல் நான் சாம் ஆண்டர்சன் பேசறேன்.

கமல் : ஹலோ சார் வணக்கம் .நானே உங்கள பாக்கலாம்னு தான் கிளம்பிட்டு இருந்தேன் .. அதுக்குள்ள நீங்க .. என்ன சார் திடீர்னு .., உங்க பி.ஏ கிட்ட சொல்லி கூபிடுனு சொல்லியிருந்தாலே அடுத்த நிமிஷம் நான் அங்கிருந்திருப்பேன்.

சாம் : பரவாயில்ல கமல் பி.ஏ க்கு ஒரு படத்துல டான்ஸ் மாஸ்டர் கேரக்டர் ஒன்னு வந்துச்சு . நான் தான் ,சான்ஸ் கிடைக்கறப்போ பயன்படுத்திக்கோனு சொல்லி அனுப்பிச்சேன்.

கமல் :சந்தோசம் சார்.உங்களோட மனசு யாருக்கு வரும் .

சாம் :அப்புறம் கமல் ஏதோ என்ன பார்க்க கிளம்புனதா சொன்னியே ,என்ன விஷயம் .

கமல் :அய்யா எனக்கு கூட புதுசா ஒரு படம் கமிட் ஆகியிருக்கு ..அதான் உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கலாம்னு புறப்பட்ட அதுக்குள்ளே உங்களோட கால் .....

சாம் :அப்புடியா ..சரி சரி ...அப்புறம் என்னோட ''யாருக்கு யாரோ'' படம் ஆஸ்கருக்கு பரிந்துரை பண்ணியிருக்காங்க .மொத்தம் அஞ்சு பிரிவுக்கு ,அதுல நாலு எனக்கு.

கமல் :அப்படிங்கள யா ரொம்ப சந்தோசம் .

சாம் :அப்புறம் கமல் அஞ்சு ஆஸ்கர் என்னோட படத்துக்கு உறுதியா கிடைக்கும்னு பேச்சு அடிபடுது அதனால., உலகத்துல உள்ள அத்தனை கலைஞர்களும் எனக்கு போன்ல வாழ்த்துக்கள் தெரிவிச்சபடி இருக்காங்க ..அது போக பேக்ஸ்,மெயில்னு எக்கச்சக்கமா வந்துட்டிருக்கு .. டெலிகிராம் கூட அனுப்பிட்டு இருக்காங்க ..

கமல் : ஒரே படத்துல இப்படி கலக்கிட்டீங்களே சார் .

சாம் :கமல் லயன்ல இரு ஏதோ சட்டம் கேட்குது என்னன்னு பார்த்துட்டு வந்துர்றேன் .

கமல் :சரிங்கையா

கமல் :டேய் என்னடா கண்ணு கலங்கியிருக்கு

டிரைவர் : சார் அது வந்து .............


கமல் :மெதுவா சொல்லுடா தலைவர் லைன்ல இருக்கார் .


டிரைவர் :சார் என்னோட பிரெண்ட்ஸ் யாருக்கு யாரோ படம் பாத்துட்டு இருக்கும் போது..


கமல் :சொல்லுடா ....... அஞ்சு ஆஸ்கர் அவார்ட் கிடைக்கும்னு பேச்சாமே .,நீ பாத்தியா எப்படியிருக்கு..டிரைவர் : பிரெண்ட்ஸ் கூட படத்துக்கு போறதா இருந்தேன் .....கமல் :முதல்லயே தலைவரோட படத்துக்கு போகனும்னு சொல்லியிருந்தா அனுப்பியிருப்பனே..டிரைவர் :ஏன் நான் உயிரோட இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா .


5 comments:

கவிதை காதலன் said...
This comment has been removed by the author.
கவிதை காதலன் said...

தமிழ் காதலன் சார்.. நல்ல கற்பனை. ஆனா கமல் இதைப் படிச்சார்'ன்னா நிச்சயமா உங்க வீட்டுக்கு ஆட்டோ வர்றது உறுதி. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

தமிழ் காதலன் said...

உங்களது வருகைக்கும் .,
உங்களது வாழ்த்துக்களும்,
எனக்கு எப்போதும் தேவை.
நன்றி.மீண்டும் வருக .

தமிழ் காதலன் said...

எனது பதிவை பார்த்து வாக்களித்து தமிழிசில் முன்னணியில் இடம் பிடிக்க வைத்த அத்துணை தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றிகள்.

uyir said...

சூப்பர் கற்பனை டா குழந்தை
உன் விஜியம்மா