வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: "செல்லமே"

Monday, August 10, 2009

"செல்லமே"
மல்லிகை,முல்லை,பன்னீர் புஷ்பம்,சிவந்த ரோஜா -

கோர்த்துக்கட்டிய பூச்சரம் போலே எல்லாரும் ஒண்ணு சேருங்க,

சேர்ந்து நாங்க சொல்லப்போற கதைய கேளுங்க..,


அரை வயிறு கஞ்சி குடித்து,
ஆத்து மேட்டில் ஆடு மேய்ச்சு,
சுள்ளிக்காட்டில் விறகு பொறுக்கி,
காலில் தைத்த முள்ளையும் கண்டுக்காம,
முல்லையுன்னை ஆளாக்க,
கஷ்டப்பட்டு பாடுபட்டங்க.
உன்னை படிக்க................
உன்னை படிக்க வைக்க கஷ்டப்பட்டாங்க.

ஆனா நீ அவங்க பேச்ச,
கேட்காம மதிக்காம நடப்பதேனோ,
இனியும் இம்மியும் மதிக்காமல் நடந்திடாதே,
விழியுனை காத்திடும் இமையான பெற்றோரை.
பத்து மாசம் சுமந்தாள் உன்னை,
சுமையை நினைத்தா கண்ணே!
இல்லை,சுகமாய் நினைத்தே.

உன் தேவையறிந்து கடும் மழை வெயில் பார்க்காம,
பனியும் பார்க்காம பணி செய்து,
பிணியிலும் உனைக்காத்தாள்.
அந்த காசிலே உனக்கு பால் பவுடரும்,
அணிய துணியும் எடுத்து வந்தார்கள்.

அவள் படும் துன்பத்தைப் பார்த்தாவது,
அவர்கள் சொல் கேளாயோ.

எத்துனையோ குழந்தை செல்வங்கள்,
தெய்வத்தின் குழந்தைகள் எனும் பேரில்,
ரோட்டோரம் ஆதரவின்றி திரிவோர் எத்தனை,
அக்காட்சி நம் கண்களை குளமாக்கும்.

நம்மால் உதவி செய்ய நெஞ்சம் முடியும்,
ஆனால் எத்துனை பேருக்கு,
அதற்காகவே உதவும் கரங்கள் தோன்றின,

ஆனால் .......

உனக்காகவே
உயிர் வாழும்,
உந்தையும் தாயும்,
மகிழும் படி அவர் சொல் கேளாய்!
என் செல்லமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

4 comments:

கவிதை காதலன் said...

ரொம்ப வலியான பதிவு.. மனசை ரொம்ப பாதிக்குது

தமிழ் காதலன் said...

நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகள் தானே.
அனைவருக்கும் ஒரு வலி இருக்கத்தான் செய்யும்.

தமிழ் காதலன் said...
This comment has been removed by the author.
வெறும்பய said...

வலிகளை சொல்லும் வரிகள் அருமை . .