ஆனந்தபுரத்து வீடு - திரைவிமர்சனம்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைமேல் வைத்துள்ள பாசத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் ஆவிகளின் பிள்ளை பாசமாக உருவான கதைதான் ஆனந்தபுரத்து வீடு.
ஆனந்தபுரத்து வீடு"> சென்னையில் தொழிலதிபராக இருக்கும் நந்தா, அவரின் காதல் மனைவி சாயாசிங், அவரது வாய் பேச முடியாத மகன் ஆனந்த். அவருக்கு ஏற்படும் தொழில் நஷ்டத்தால் கடன் காரர்களின் தொல்லையால் தனது சொந்த ஊருக்கு வந்து அவரின் பூர்வீக வீட்டில் தங்குகிறார். அங்கு ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை அவரின் வாய் பேச முடியாத மகன் ஆனந்துக்கு தெரிய வருகிறது. இதே நேரத்தில் கடன் காரர்களும் இவர்களை வீட்டுக்காவலில் வைக்கிறார்கள். இதனால் நந்தா குடும்பம் படும் அவஸ்தையும் அதில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறர்கள் என்பதும்தான் படத்தின் கதை.
பேய்விரட்டும் சாமியார்களை வீட்டுக்கு வரவழைத்து பூஜைகள் செய்கிறார் பாலா . பாசத்தினால் அலையும் பேயை அவ்வளவு எளிதில் விரட்ட முடியாது என்று சாமியார்கள் கைவிட, என்ன செய்வது என புரியாமல் ஆவிகளிடம் தவியாய் தவிக்கிறார் பாலா. பின் ஆவிகளால் நமக்கு தொல்லையில்லை, அவைகள் நமக்கு உதவியாய்தான் இருக்கிறது என்று தன் மனைவிமூலம் தெரிந்துகொள்கிறார்.
பாலாவின் குடும்பத்தை ஆவிகள் ஒருபக்கம் பாசத்துடன் துரத்த, வில்லன்கள் மறுபக்கம் துரத்த, அட சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா என்று சொல்லும் அளவிற்கு சஸ்பென்ஸ். நண்பன் என நினைத்த ஜீவா பாலாவிடமிருந்தே இரண்டு கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதும், பாலாவிற்கு பிஸ்னஸில் லாஸ் இல்லை என்பதும் தன் பெற்றோரின் ஆவிகள் மூலமாகவே பாலாவிற்கு உண்மை தெரிய வருகிறது. ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வர, ஆவிகளும் வீட்டை விட்டு சென்றுவிடுகிறது.
கதைநாயகனாக நந்தா, திறமைசாலி நடிகர். அருமையாக வாழ்ந்துள்ளார் நந்தா.. சாயாசிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். சிறுவனின் பார்வையும் நடிப்பும் சூப்பர்..
எது எப்படியோ ஆவிகளை வைத்து பாச போராட்டத்தை முடித்து காட்டியுள்ளார் இயக்குநர் நாகா அவர்கள்.
0 comments:
Post a Comment