வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: தனிமை

Saturday, July 10, 2010

தனிமைதனிமை சிலருக்கு சுமை...
அதுதான் சிலருக்கு இனிமை...
அது சிலருக்கு வேதனை...
அதுவே சிலருக்கு போதிமரம்.

தனிமையில் இருந்து யோசித்தால்,
ஆயிரம் அலைகள் சுனாமியாய்,
கொப்பளிக்கும் எரிமலையாய்.

பற்பல நிகழ்வுகள் நினைவலையில்,
சிற்சில விசயங்கள் தென்றலாய்,
நிகழ்வுகள் கவிதையாய்.

சில நிகழ்வுகள் சூறாவளியாய்,
சில தகிக்கும் அனலாய்,

சோகம் யாருக்கும் இல்லாதிருப்பதில்லை,
சோகமே வாழ்க்கையாகி விடுவதில்லை.

மழலையின் முகம் போல் எல்லோர்க்கும் வாய்த்திருக்கும்,
அது ஒரு காலம் அக்கணம் என்றும் தொடர்ந்திட,
உழைத்திடுவோம் உண்மையாய்.

நாம் முயன்றிட்டால் முடியாமல் போய் விடுமோ,
முயன்றால் முடியாததேது.

தீபங்கள் மேல் நோக்கி தான் எரியும்,
கண்டுபிடிப்பால் மின்னிழைகள் கீழ் ஒளி தரவில்லையா,
அதை உருவாக்கியவர் எப்படியெல்லாம் முயன்றிருப்பார் ,

நிச்சயம் தனிமையும் அவருக்கு துணையாய் இருந்திருக்கும் .
உழைப்பினால் வராத உறுதிகள் இல.


இலக்கு ஒன்றை நாம் கண்டு கொண்டால்,
அதற்கான பாதையை உழைப்பு அமைக்கும்,
தனிமையும் வெற்றிக்கு பாதை வகுக்கும்.

கிடைக்கும் தனிமை தனை பயன்படுத்துவோம்,
வெற்றிக்கு வழி காட்டும் வகையில் மாற்றிடுவோம்,
உலகை வென்றிடுவோம்..