வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: 07/01/2010 - 08/01/2010

Sunday, July 18, 2010

தாய்மை


உயிருக்கு உரம் கொடுத்தாய்,



kulandhaivels@gmail.com

Wednesday, July 14, 2010

Senthoora Poove Sun Tv Shows 29-04-2009 Part 3



kulandhaivels@gmail.com

Saturday, July 10, 2010

ஆனந்தபுரத்து வீடு - திரைவிமர்சனம்



ஆனந்தபுரத்து வீடு - திரைவிமர்சனம்




பெற்றோர்கள் தங்கள் பிள்ளைமேல் வைத்துள்ள பாசத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் ஆவிகளின் பிள்ளை பாசமாக உருவான கதைதான் ஆனந்தபுரத்து வீடு.


<span title=ஆனந்தபுரத்து வீடு"> சென்னையில் தொழிலதிபராக இருக்கும் நந்தா, அவரின் காதல் மனைவி சாயாசிங், அவரது வாய் பேச முடியாத மகன் ஆனந்த். அவருக்கு ஏற்படும் தொழில் நஷ்டத்தால் கடன் காரர்களின் தொல்லையால் தனது சொந்த ஊருக்கு வந்து அவரின் பூர்வீக வீட்டில் தங்குகிறார். அங்கு ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை அவரின் வாய் பேச முடியாத மகன் ஆனந்துக்கு தெரிய வருகிறது. இதே நேரத்தில் கடன் காரர்களும் இவர்களை வீட்டுக்காவலில் வைக்கிறார்கள். இதனால் நந்தா குடும்பம் படும் அவஸ்தையும் அதில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறர்கள் என்பதும்தான் படத்தின் கதை.


பேய்விரட்டும் சாமியார்களை வீட்டுக்கு வரவழைத்து பூஜைகள் செய்கிறார் பாலா . பாசத்தினால் அலையும் பேயை அவ்வளவு எளிதில் விரட்ட முடியாது என்று சாமியார்கள் கைவிட, என்ன செய்வது என புரியாமல் ஆவிகளிடம் தவியாய் தவிக்கிறார் பாலா. பின் ஆவிகளால் நமக்கு தொல்லையில்லை, அவைகள் நமக்கு உதவியாய்தான் இருக்கிறது என்று தன் மனைவிமூலம் தெரிந்துகொள்கிறார்.


பாலாவின் குடும்பத்தை ஆவிகள் ஒருபக்கம் பாசத்துடன் துரத்த, வில்லன்கள் மறுபக்கம் துரத்த, அட சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா என்று சொல்லும் அளவிற்கு சஸ்பென்ஸ். நண்பன் என நினைத்த ஜீவா பாலாவிடமிருந்தே இரண்டு கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதும், பாலாவிற்கு பிஸ்னஸில் லாஸ் இல்லை என்பதும் தன் பெற்றோரின் ஆவிகள் மூலமாகவே பாலாவிற்கு உண்மை தெரிய வருகிறது. ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வர, ஆவிகளும் வீட்டை விட்டு சென்றுவிடுகிறது.


<span title=


கதைநாயகனாக நந்தா, திறமைசாலி நடிகர். அருமையாக வாழ்ந்துள்ளார் நந்தா.. சாயாசிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். சிறுவனின் பார்வையும் நடிப்பும் சூப்பர்..


எது எப்படியோ ஆவிகளை வைத்து பாச போராட்டத்தை முடித்து காட்டியுள்ளார் இயக்குநர் நாகா அவர்கள்.

தனிமை



தனிமை சிலருக்கு சுமை...
அதுதான் சிலருக்கு இனிமை...
அது சிலருக்கு வேதனை...
அதுவே சிலருக்கு போதிமரம்.

தனிமையில் இருந்து யோசித்தால்,
ஆயிரம் அலைகள் சுனாமியாய்,
கொப்பளிக்கும் எரிமலையாய்.

பற்பல நிகழ்வுகள் நினைவலையில்,
சிற்சில விசயங்கள் தென்றலாய்,
நிகழ்வுகள் கவிதையாய்.

சில நிகழ்வுகள் சூறாவளியாய்,
சில தகிக்கும் அனலாய்,

சோகம் யாருக்கும் இல்லாதிருப்பதில்லை,
சோகமே வாழ்க்கையாகி விடுவதில்லை.

மழலையின் முகம் போல் எல்லோர்க்கும் வாய்த்திருக்கும்,
அது ஒரு காலம் அக்கணம் என்றும் தொடர்ந்திட,
உழைத்திடுவோம் உண்மையாய்.

நாம் முயன்றிட்டால் முடியாமல் போய் விடுமோ,
முயன்றால் முடியாததேது.

தீபங்கள் மேல் நோக்கி தான் எரியும்,
கண்டுபிடிப்பால் மின்னிழைகள் கீழ் ஒளி தரவில்லையா,
அதை உருவாக்கியவர் எப்படியெல்லாம் முயன்றிருப்பார் ,

நிச்சயம் தனிமையும் அவருக்கு துணையாய் இருந்திருக்கும் .
உழைப்பினால் வராத உறுதிகள் இல.


இலக்கு ஒன்றை நாம் கண்டு கொண்டால்,
அதற்கான பாதையை உழைப்பு அமைக்கும்,
தனிமையும் வெற்றிக்கு பாதை வகுக்கும்.

கிடைக்கும் தனிமை தனை பயன்படுத்துவோம்,
வெற்றிக்கு வழி காட்டும் வகையில் மாற்றிடுவோம்,
உலகை வென்றிடுவோம்.



.