வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: அன்பு செல்வமே !

Wednesday, August 12, 2009

அன்பு செல்வமே !

உன் அன்பே நான் சேமித்த செல்வம்,


உன் வாய் ஒரு சொல்...
ஒரு சொல் கடும் சொல் பிரசவித்தால்,
என் நெஞ்சம் புண்ணாகிப்போகும்,
என்றாலும் ,
அதை நீ எண்ணி வருந்தும் வேளையும்,
என் நெஞ்சம் ரணமாகும்,
நீ ஏதோ கோபத்தால் உணவெடுக்க மறுத்தாலும்,
வாடும் உன் அன்னையின் மனம்,
நான் வாழ்வதே உனக்காய்.....


ஆயினும்.............
நீ கோபிக்கும் அழகையும் நான் ரசிக்கிறேன்,
கோபம் மறந்து நீ...
அம்மா என்னை மன்னிச்சுக்கோ....
என கேட்கும் பொழுது....
என்னையும் அறியாமல்........
நான் மனதினுள் அழுதிடுவேன்....
உன் மனதை அறிவேன்..
உன் தேவையையும் அறிவேன்,
நீ கேட்கும் முன் அதை கொடுக்கவே,
நான் இருக்கிறேன் உனக்காய்...
எப்போதும் ....
கலங்காதே...
என் சுவாசமே நீ....................