வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: "அன்புள்ள என்னவளே!"

Friday, August 14, 2009

"அன்புள்ள என்னவளே!"


என் இதய துடிப்பின் ஓசையில்,
உன் பெயரை கேட்கிறேன்.

உன் பெயரை கேட்கும் போது,
ஸ்வரங்கள் கேட்டதாய் உணர்கிறேன்.

கண்கள் இரண்டால் கட்டி இழுக்கிறாய்,
என் இதய கப்பலை.

எனிதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும்,
உன்னை நினைத்தே துடிக்கிறது.

உன் வாசம் உள்ள வரை நானும்,
வாழ்வேன் தரணியிலே.

அழியில் நீர் ஆவியாகி வற்றலாம்,
ஆவியனேனெனினும் வற்றாதென் காதல்.

ஏழிசையை கேட்போர் இசைவர் அதன்பால்,
நானிசைந்தேன் உன் பெயரால்.

பாலையில் தாகமாய் தேடுவர் நீர் தென்படும்,
ஆனால் கானலாயன்றோ.

நானும் கண்டேன் உன்னை விழியுறங்கி,
திறந்தேன் கானலாய் மாயமானாய்.

மாயமானாகி சீதையை தூக்கி சென்றான்,
அன்று லங்கை வேந்தன்.

மானே உன்னை கண்களால் கைது,
செய்தேன் விழித்தேன் கனவிலே.

நீ கிடைக்க நான் முயன்றேன்,
நீயும் முயன்றாய் தோற்றது.

தோற்றது நம் முயற்சி மட்டுமே,
கண்ணே நம் காதல் இல்லை.

தீ விழி பார்வை பட்டு,
எரிந்ததோ நம் காதல்.

அக்கினி பிழம்பில் இட்டாலும் துடிக்கும்,
காதல் இதயம் அல்லவா.

இதயமே! இறந்தாலும் துடிப்பதை நிறுத்தாதே,
அவள் வாழ்ந்த கோவிலது.

அன்பே நீ விரும்பிய இதயம் இருக்கும்,
உனதறையில் என்றும் வசிப்பாய்.

உன்னைக் காட்டிய என் கண்களோடு,
எனக்கு பின்னும் துடிக்கும்..

mailto:kulandhaivels@gmail.com