Wednesday, December 1, 2010
Friday, October 1, 2010
எந்திரன் - விமர்சனம்
எந்திரன், ஏ.ஆர்.ரகுமான், ரஜினி
நம்ப சூப்பர் ஸ்டார்ட் எந்திரன் படம் முதல் நாள் ... முதல் ஷோ... பார்க்காம இருந்தா எப்படி....? சுட சுட படத்த பார்த்து இதை எழுதறேனுகோ.
ஒரு வழியா முட்டி மோதி டிக்கெட் வாங்கி படத்த பார்த்த பிறகு கிடைக்கும் திருப்தி இருக்கே... அட அட..... ரஜினி ரஜினி தான். வயசானாலும் அவருடைய ஸ்டைலே தனி தான். இன்னும் எத்தனை வரும் ஆனாலும் அவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை என்பது நிஜம்.
படத்தின் கதையை சொல்லிவிட்டால் சுவாரிசியம் இருக்காது. படத்த பார்த்துவிட்டு நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.
'பிரமாண்ட இயக்குனர்' சங்கர் - கனவு படத்தை எடுத்த திருப்தி + வெற்றிகரமாக ஓடவைத்து இருக்கிறார். திரைகதையை கையாண்ட விதம் மிக அருமை. ரஜினி என்ற நடிகரை தனது இயக்கத்தில் முற்றிலும் மறைத்து கதையின் நாயகனாக உலா விட்டிருப்பது சிறப்பு. நல்ல வேலை.... ரஜினிக்கு ஒபெனிங் சாங் வைக்காமல் புண்ணியம் செய்துகொண்டார். கடைசி 30 நிமிஷம் நன்மை கட்டிபோடுகிறார். படம் முழுவதும் கிராபிக்ஸ் மிரட்டல்.
'சூப்பர் ஸ்டார்' ரஜினி - இரட்டை வேடத்தில் மனுசர் சும்மா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். என்திரனாக அவரது நடிப்பும் இடைவேளை வரும்போது மானும் அவரது முகபாவனைகள்.... நடிப்பில் சும்மா சென்சுரி அடிக்கிறார். ரஜினியின் பஞ்ச் டயலாக், மிரட்டல் சண்டைகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ....
'இரட்டை ஆஸ்கார் நாயகன்' ஏ.ஆர்.ரகுமான் - சங்கரை போலவே படம் முழுவதும் இவரது இசை ஒரு ஹாலிவுட் படம் பார்த்த திருதியை தருவதை நம்பால் நிச்சயம் உணர முடியும். காதல் அணுக்கள் & கிளிமஞ்சாரோ பாடல்கள் முனு முணுக்க வைக்கிறது. மற்றவைகள்...சுமார் தான். இறுதியில் SBP சார் படம் ஒரு குறும் பாடல் அழகு. ரகுமானை தொடர்ந்து விரைவில் சங்கரும் ஹாலிவுட் சென்றுவிடுவார்.
'தயாரிப்பு' சன் பிச்சர் - சங்கரின் கனவை நினைவாகிய பெருமை இவர்களையே சாரும். இந்த படத்தை இவர்களை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது என்பதே நிஜம். சாதாரண படத்தையே நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் பார்க்க வைத்துவிடுவார்கள். என்திரனை சொல்லவா வேண்டும்? படமும் சூப்பர் ஹிட். சன் இனி துணித்து பல படங்களை எடுக்க வருவார்கள். நாள் படங்களை எடுத்தால் நன்று. வாழ்த்துக்கள்.
'முன்னால் உலக அழகி' ஐஸ்வர்யா ராய் - ஜீன்ஸில் பார்த்த ஐஸ் இதில் மிஸ்ஸிங்... முடித்த வரை கதையின் ஓட்டத்தில் வருகிறார். ரஜினிக்கு பல முத்தங்களை தந்து அவ்போது நம்மையும் சூடேற்றுகிறார். முகத்தில் வயதான தோற்றம் நன்கு தெரியுது.
சந்தானம், கருணாஸ், மறைந்த ஹனிபா - சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
ரசுல்குட்டியும் இரண்டாம் பாதியில் மிக அதிகமாக வேலை செய்துள்ளார். சபாஸ்.
ரொம்ப ரசித்தது
* கிளிமஞ்சாரோ பாடல்
* ரோபோ ஒரு கைக்குழந்தையுடன் விளையாடும் இடமும்
* ராகவ் வரும் காட்சியில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அந்த ரயில் சண்டை.... யம்மாடி.... சான்சே இல்ல.
* ஹனிபாவுடன் போட்டிபோட்டு பேசும் இடம்.... ஹைலைட்.
* எஜமான் படத்துல பட்டம் பூச்சி பிடிப்பது போல இங்கே கொசுவை தேடி போவதும் அதன் பிறகு நடப்பது ரசிக்க கூடியவைகள்.
* காதல் காட்சியில் 'ஐஸை' முத்தம் திருப்பி தர கேட்டு மடக்கும் காட்சியில் ரஜினி - மாஸ் தான்.
முதல் பாதி - சிரிப்பு வெடி
இரண்டாம் பாதி - கிராபிக்ஸ் மிரட்டல்
எந்திரன் = கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
தற்போது தமிழ் திரை யுலகிற்கு நல்லகாலம் போல... பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.
kulandhaivels@gmail.com
thanks to kolipaiyan
Sunday, August 29, 2010
என் இதயத்தின் யோசனை.
உன்னை பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே..................
இந்த வரிகளின் வலியை
இன்று நான் உணர்ந்தேன்..
காதல் கூடமும் போர்க்களம் தானோ?
அதனால் தான் நீயும் என்னை
எதிரியாய் பர்க்கின்றாயோ?
பண்டைய காலம் போல் மாலையில்
தாக்குதலை நிறுத்தலாமே!
நட்பை பரிமாறலாமே!
உன் குரல் கேட்டால் மிதக்கும்
என் மனம் வானத்தில்.
ஆனால் நீ யாரென்று கேட்டதும்,
நின்று விட்டது இதயம்.,
துடித்தபடி கேட்டதென் இதயம்,
அவளுக்கு நீ யாரென்று.
அவளுக்கு நீ யாரென்று,
புரிய வை.
புரிய வை,
உன் மனதை.
உனக்குள் இருக்கும் அவள்
மனதில் நீ புகுவாய்..
என்சொல்லி துடித்தது இதயம்.
சொல்ல முடியாமல்
தவிக்கின்றதென் மனம்.
எண்ணத்தின் ஓடத்தில்,
காதல் கோட்டையின்
சான்றிதழ் போல்............
எனக்கு.........?
ஒரு நம்பிக்கை..
யோகம் தானாய் வரும் என்று...
ஆனாலும் முயாலாமல்...
கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாமா..
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
kulandhaivels@gmail.com
Sunday, July 18, 2010
Wednesday, July 14, 2010
Saturday, July 10, 2010
ஆனந்தபுரத்து வீடு - திரைவிமர்சனம்
ஆனந்தபுரத்து வீடு - திரைவிமர்சனம்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைமேல் வைத்துள்ள பாசத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் ஆவிகளின் பிள்ளை பாசமாக உருவான கதைதான் ஆனந்தபுரத்து வீடு.
ஆனந்தபுரத்து வீடு"> சென்னையில் தொழிலதிபராக இருக்கும் நந்தா, அவரின் காதல் மனைவி சாயாசிங், அவரது வாய் பேச முடியாத மகன் ஆனந்த். அவருக்கு ஏற்படும் தொழில் நஷ்டத்தால் கடன் காரர்களின் தொல்லையால் தனது சொந்த ஊருக்கு வந்து அவரின் பூர்வீக வீட்டில் தங்குகிறார். அங்கு ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை அவரின் வாய் பேச முடியாத மகன் ஆனந்துக்கு தெரிய வருகிறது. இதே நேரத்தில் கடன் காரர்களும் இவர்களை வீட்டுக்காவலில் வைக்கிறார்கள். இதனால் நந்தா குடும்பம் படும் அவஸ்தையும் அதில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறர்கள் என்பதும்தான் படத்தின் கதை.
பேய்விரட்டும் சாமியார்களை வீட்டுக்கு வரவழைத்து பூஜைகள் செய்கிறார் பாலா . பாசத்தினால் அலையும் பேயை அவ்வளவு எளிதில் விரட்ட முடியாது என்று சாமியார்கள் கைவிட, என்ன செய்வது என புரியாமல் ஆவிகளிடம் தவியாய் தவிக்கிறார் பாலா. பின் ஆவிகளால் நமக்கு தொல்லையில்லை, அவைகள் நமக்கு உதவியாய்தான் இருக்கிறது என்று தன் மனைவிமூலம் தெரிந்துகொள்கிறார்.
பாலாவின் குடும்பத்தை ஆவிகள் ஒருபக்கம் பாசத்துடன் துரத்த, வில்லன்கள் மறுபக்கம் துரத்த, அட சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா என்று சொல்லும் அளவிற்கு சஸ்பென்ஸ். நண்பன் என நினைத்த ஜீவா பாலாவிடமிருந்தே இரண்டு கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதும், பாலாவிற்கு பிஸ்னஸில் லாஸ் இல்லை என்பதும் தன் பெற்றோரின் ஆவிகள் மூலமாகவே பாலாவிற்கு உண்மை தெரிய வருகிறது. ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வர, ஆவிகளும் வீட்டை விட்டு சென்றுவிடுகிறது.
கதைநாயகனாக நந்தா, திறமைசாலி நடிகர். அருமையாக வாழ்ந்துள்ளார் நந்தா.. சாயாசிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். சிறுவனின் பார்வையும் நடிப்பும் சூப்பர்..
எது எப்படியோ ஆவிகளை வைத்து பாச போராட்டத்தை முடித்து காட்டியுள்ளார் இயக்குநர் நாகா அவர்கள்.
தனிமை
தனிமை சிலருக்கு சுமை...
அதுதான் சிலருக்கு இனிமை...
அது சிலருக்கு வேதனை...
அதுவே சிலருக்கு போதிமரம்.
தனிமையில் இருந்து யோசித்தால்,
ஆயிரம் அலைகள் சுனாமியாய்,
கொப்பளிக்கும் எரிமலையாய்.
பற்பல நிகழ்வுகள் நினைவலையில்,
சிற்சில விசயங்கள் தென்றலாய்,
நிகழ்வுகள் கவிதையாய்.
சில நிகழ்வுகள் சூறாவளியாய்,
சில தகிக்கும் அனலாய்,
சோகம் யாருக்கும் இல்லாதிருப்பதில்லை,
சோகமே வாழ்க்கையாகி விடுவதில்லை.
மழலையின் முகம் போல் எல்லோர்க்கும் வாய்த்திருக்கும்,
அது ஒரு காலம் அக்கணம் என்றும் தொடர்ந்திட,
உழைத்திடுவோம் உண்மையாய்.
நாம் முயன்றிட்டால் முடியாமல் போய் விடுமோ,
முயன்றால் முடியாததேது.
தீபங்கள் மேல் நோக்கி தான் எரியும்,
கண்டுபிடிப்பால் மின்னிழைகள் கீழ் ஒளி தரவில்லையா,
அதை உருவாக்கியவர் எப்படியெல்லாம் முயன்றிருப்பார் ,
நிச்சயம் தனிமையும் அவருக்கு துணையாய் இருந்திருக்கும் .
உழைப்பினால் வராத உறுதிகள் இல.
இலக்கு ஒன்றை நாம் கண்டு கொண்டால்,
அதற்கான பாதையை உழைப்பு அமைக்கும்,
தனிமையும் வெற்றிக்கு பாதை வகுக்கும்.
கிடைக்கும் தனிமை தனை பயன்படுத்துவோம்,
வெற்றிக்கு வழி காட்டும் வகையில் மாற்றிடுவோம்,
உலகை வென்றிடுவோம்.
.